Sunday, February 24, 2008

பெண் விடுதலை

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் முக்கியமான ஆரம்பப்படிகள்
என்ன என பாரதியாருடைய கருத்துக்களை பார்ப்போம் .
பெண்கள் ருதுவாகுமுன்பு திருமணம் செய்து கொடுக்கக்கூடாது.
அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி
வற்புறுத்தல் கூடாது.
விவாகம் செய்துகொண்டபிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்கவேண்டும் .அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக்கூடாது.
பிதுராஜ்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்கவேண்டும்
புருஷன் இறந்தபிறகு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்வதை த்தடுக்ககூடாது.
விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம் ,கைத்தொழில் முதலியவற்றால் கவுரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சியான
தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்கவேண்டும் .
பெண்கள் கணவனைத்தவிர வேறுபுருஷருடன் பேசக்கூடாதென்று,
பயத்தாலும் ,பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
பெண்களுக்கும் ஆண்களைப்போலவே உயர்தரக்கல்வியின் எல்லா கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்தவேண்டும் .
தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும்
அதை சட்டம் தடுக்கக்கூடாது .
தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை .எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்தில் காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர் .அன்னிபெசன்ட் ஸ்திரீ என்பதை மறந்து பேசக்கூடாது .
இவ்வாறு நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டிநோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியை காப்பாற்றுவார்கள் .அப்போதுதான் நமதுதேசத்து பூர்வீக ரிஷிபத்னிகள்
இருந்த ஸ்திதி நமது ஸ்த்ரீகள் வர இடம் உண்டாகும்.
பெண் உயராவிட்டால் ஆண் உயரமுடியாது. .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home